ஆன்மீகம்

2025ஆம் ஆண்டு பேராபத்துகள்: பாபா வங்காவின் கணிப்புகள்!

Published

on

பூமியில் எங்கும் எதிர்பாராத மழை அதிகரித்து, புயலும் வீசுகிறது. இந்த நிலைமையில், பாபா வங்காவின் கணிப்புகள் நினைவுக்கு வருகின்றன. 2025ஆம் ஆண்டில் என்ன நடக்கப்போகிறது? பாபா வங்கா கூறிய அதிர்ச்சி கணிப்புகள் என்ன என்பதை இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.

பல தீர்க்கதரிசிகளுள், பாபா வங்கா மிகவும் பிரபலமானவர். அவர் ஆண்டுதோறும் உலகில் நிகழும் நிகழ்வுகளை முன்னரே கணித்துள்ளார். இதுவரை அவர் அளித்த பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன.

பால்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா, 12 வயதில் பார்வையை இழந்தார். பார்வை மறைந்த பிறகு, எதிர்காலத்தை கணிக்கும் சக்தி பெற்றதாக கூறப்படுகிறது. அவர் இறக்குமளவில், ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வுகளை சுட்டி எழுதியுள்ளார்.

2025ல் என்ன நடக்கும்?

2025ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்புகள் அச்சுறுத்தலாகவே உள்ளன. 2025ஆம் ஆண்டில் உலக அழிவு தொடங்கும் என்றும், 5079ஆம் ஆண்டில் பூமி அழியும் என்று அவர் கணித்துள்ளார்.

இந்த ஆண்டு பெரிய மோதல்கள் மற்றும் சோகமான சம்பவங்கள் நிகழ்வதாக அவர் கூறுகிறார், இது மனிதகுலத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். ஐரோப்பாவில் ஒரு பேரழிவுக்கான மோதல்களில், கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் எனக் கணிக்கிறார்.

2025-க்கு பிறகு என்ன நடக்கும்?

2025ஆம் ஆண்டில், மோதலால் மக்கள் தொகை குறைந்து, 2028ல் மனிதர்கள் வீனஸை அடைவார்கள் என்று பாபா வங்கா கூறுகிறார். பின்னர், 2033ஆம் ஆண்டில் பெரிய பனிக்கட்டிகள் உருகி, கடல் மட்டம் உயரும் என்றும் அதனால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் எனக் கணிக்கிறார்.

2130ஆம் ஆண்டில், வேற்றுகிரகவாசிகளுடன் மனித தொடர்பு ஏற்படும். 2170ல் பருவநிலை மாற்றம் பூமியில் அழிவுகளை ஏற்படுத்தும் என்றும் 3005ஆம் ஆண்டில் பூமி மற்றும் செவ்வாய் கிரகம் இடையே போர் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 3797ல் பூமியிலிருந்து உயிர்கள் பிரியும் என்றும், இறுதியாக 5079ஆம் ஆண்டில் உலகம் அழிந்து மனித இனமும் அழிந்து விடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Poovizhi

Trending

Exit mobile version