தமிழ்நாடு

தமிழகத்தில் 12 பேர்களுக்கு ஒமிக்ரானுக்கு முந்தைய அறிகுறி: சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!

Published

on

தமிழகத்தில் 12 பேர்களுக்கு ஓமே ஒமிக்ரானுக்கு முந்தைய அறிகுறி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் பரவி வருகிறது என்பதும் இந்தியாவில் சில நாட்களுக்கு முன் பரவிய ஒமிக்ரான் வைரஸ் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்திலும் பரவியது என்பதையும் பார்த்தோம்.

வெளிநாட்டிலிருந்து வந்த பெண் ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 12 பேர்களுக்கு ஒமிக்ரானுக்கு முந்தைய வகை ஜீன் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒமிக்ரானுக்கு முந்தைய அறிகுறி உள்ள 12 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால் தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்பதால் தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் திடீரென ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தமிழக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது/ ஆனால் அதே நேரத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதார துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் மீண்டும் ஒருமுறை ஊரடங்கை மக்கள் சந்திக்க வேண்டிய நிலை இருக்காது என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending

Exit mobile version