இந்தியா

பிரசாந்த் கிஷோர் குழுவினர் 23 பேர் சிறை வைப்பு: காவல்துறை அதிரடி நடவடிக்கை

Published

on

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுக்கும் பிரசாந்த் கிஷோரின் குழுவினர் 23 பேர்களை திரிபுரா மாநில காவல்துறையினர் சிறை வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 2026 வரை அரசியல் வியூகங்களை அமைத்து கொடுக்க பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் ஏற்கனவே மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த பிரசாந்த் கிஷோர், அடுத்ததாக திரிபுரா மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வேலை செய்ய உள்ளது. இதற்காக பிரசாந்த் கிஷோர் நிறுவனத்தில் பணிபுரியும் 23 ஊழியர்கள் நேற்று திரிபுரா தலைநகர் அகர்தலா வந்தனர்.

இந்த நிலையில் திரிபுராவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை ஆராய அவர்கள் வந்தபோது திடீரென அவர்கள் தங்கியிருந்த ஓட்டலை விட்டு வெளியேற போலீசார் அனுமதி தரவில்லை. திரிபுரா தலைநகர் ஜகார்தாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து புதிதாக வந்த 23 பேரையும் ஹோட்டலை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுக்காக காத்திருக்கிறோம் என்றும் முடிவுகள் வந்த பிறகு அவர்கள் ஹோட்டலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திரிபுரா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மேலும் இதுவொரு வழக்கமான நடைமுறை தான் என்றும், இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திரிபுராவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version