தமிழ்நாடு

“நான் வெளியேறுகிறேன்!!!”- திமுகவின் ‘மூளையாக’ இருந்த பிரசாந்த் கிஷோர் ‘பகீர்’ அறிவிப்பு

Published

on

திமுக-வின் தேர்தல் வல்லுநராக செயல்பட்டு வந்த ‘ஐ-பேக்’ நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர், அரசியல் வல்லுநர் பொறுப்பிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

அவர் 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் பிரச்சாரக் குழு வல்லுநராக செயல்பட்டு பெயர் பெற்றார். அதைத் தொடர்ந்து டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் ஆவதற்கும், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வர் ஆவதற்கும் உதவி புரிந்தார்.

2021 ஆம் ஆண்டான தற்போது மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், தமிழகத்தில் திமுகவிற்கும் அவர் அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வந்தார்.

இன்று சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவர் ஆலோசகராக இரண்டு கட்சிகளும் இந்த முறை தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் இடத்திற்கு வந்துள்ளன. இப்படியான சூழலில் அவர் தன் பொறுப்பிலிருந்து நீங்குவதாக அறிவித்துள்ளது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

சில மாதங்களுக்கு முன்னரே அவர், ‘மேற்கு வங்கத்தில் பாஜக மூன்று இலக்கு எண்கள் கொண்ட தொகுதிகளைக் கைப்பற்ற திணறும். நான் சொல்வது நடக்கவில்லை என்றால் என் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறேன்’ என்று சவால் விட்டார். அவர் சொன்னது போலவே பாஜக, 100 இடங்களைக் கூட மேற்கு வங்கத்தில் முன்னிலையில் இல்லை.

இருப்பினும் அவர் வெளியேறுவதாக அறிவித்துள்ளது அரசில் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Trending

Exit mobile version