தமிழ்நாடு

திமுகவிடம் ரூ. 400 கோடி வாங்கிய பிரசாந்த் கிஷோர்: போட்டுத்தாக்கும் சீமான்!

Published

on

புலம்பெயர் தொழிலாளர்களை மிரட்டும் வகையில் பேசியிருந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து சீமானின் வீடியோவை பகிர்ந்த பிரசாந்த் கிஷோர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் சீமான் பிரசாந்த் கிஷோருக்கு அதிரடி பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார்.

#image_title

இந்திக்கார பய எல்லாம் தெறிச்சு ஓட போறான். நான் ஆட்சிக்கு வந்தால் ஒரே வாரத்தில் அவன் எல்லாம் பெட்டியை கட்டிக்கொண்டு போய்விடுவான். எத்தனை பேரை எங்கே வைத்து வெளுப்பேன் என்று தெரியாது. ஒரே வாரத்தில் எல்லாரையும் வீட்டிற்கு அனுப்பிவிடுவேன். கஞ்சா வச்சு இருக்கான்.. கேஸ் போடு.. அபின் வச்சு இருக்கான் கேஸ் போடு.. பலாத்காரம் பண்ணிட்டான் கேஸ் போடு என்று ஜெயிலில் போடுவேன். எத்தனை பேரை எங்கே வைத்து வெளுப்பேன் என்று தெரியாது. ஒரு ஆயிரம் பேரை தூக்கி உள்ளே போடுவேன். அவனுக்கு சோறு போட மாட்டேன். அவர்களை விட மாட்டேன். எல்லாம் தெறிச்சு ஓட போகிறான் என்று சீமான் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரசாந்த் கிஷோர் சீமான் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனையடுத்து சீமான் மீது, தேசிய ஒருமைப்பாட்டிற்கு களங்கம் விளைவித்தல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பிரசாந்த் கிஷோர், உடனடியாக நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற என்எல்சி ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், வட இந்தியர்கள் அதிகமாக தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். அதை முறைப்படுத்துங்கள் என்று தான் நான் பேசினேன். பிரசாந்த் நீங்கள் பீகாரி, பீகாரிக்கு உண்மையாக இருக்கிறீர்கள். நான் தமிழன், என் இனத்திற்கு உண்மையாக இருக்கிறேன். கர்நாடகா, ஆந்திராவில் இருக்கும் தமிழர்களை அடித்தால் என்ன செய்வீர்கள் எனக் கேட்பார்கள். அவர்கள் இதற்கு முன் அடித்தபோது என்ன செய்தீர்கள்? என்னை அச்சுறுத்தாதீர்கள். நீங்கள் தொட்டால் நானும் தொடுவேன்.

ஒன்றேகால் கோடி பேருக்கும் மேல் இங்கு குடிபெயர்ந்துள்ளார்கள். நாம் நமது வேலைவாய்ப்பை இழப்பது மட்டுமல்ல. இன்று கூலியாக உள்ளவர்கள் நாளைய முதலாளியாக மாறுவார்கள். நிலம் அவர்கள் கையில் போகும். நாம் நிலமற்ற அடிமைகளாவோம். இவை அனைத்தும் வரலாற்றெங்கிலும் நிகழ்ந்துள்ளது. அதை பார்க்கும்போது நமக்கு பயம் வருகிறது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.

வட இந்தியர்கள் வருகையை முறைப்படுத்துங்கள். அப்பொழுதுதான் அவர்களைக் கண்காணிக்க முடியும். நேற்று மீனவர்கள் கைதான போது, வயிற்றுப்பசிக்கு தானே வந்தார்கள், ஏன் கைது செய்தீர்கள் என யாரும் கேட்கவில்லையே. நான் அடிவாங்கும் பொழுது நன்முறையாக உள்ளது, மற்றவர்கள் அடிவாங்கும் போது உங்களுக்கு ஏன் வன்முறையாகத் தெரிகிறது. உடனே வன்முறையைத் தூண்டுகிறார். இரு இனங்கள் இடையே பகையைத் தூண்டுகிறார் என வழக்கு போடுகிறார்கள்.

400 கோடி ரூபாய் வாங்கிவிட்டு திமுகவிற்கு வேலை செய்தவர் எனக்கு 4 ரூபாய் கூட வாங்காமல் இந்தியா முழுவதும் சீமான் என்ற ஒருவர் இருக்கிறார் எனத் தெரியப்படுத்தியுள்ளார். இதற்காகவே பிரசாந்த் கிஷோருக்கு நன்றி சொல்ல வேண்டும் என அதிரடியாக பேசியுள்ளார் சீமான்.

seithichurul

Trending

Exit mobile version