இந்தியா

ராகுல், பிரியங்காவுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: உபி தேர்தலுக்கு தயாராகிறதா காங்கிரஸ்?

Published

on

உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் ஏற்கனவே பாஜக தரப்பில் இருந்து தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளைத் தொடங்கும் வேலையை செய்து வருகிறது.

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் இந்த முறை ஆட்சியை பிடித்து தீரவேண்டும் என்ற முடிவில் இருக்கிறது. இதற்காக உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறங்குவார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உத்தரபிரதேச மாநிலத்தில் வீடு எடுத்து தங்கி அம்மாநிலத்தில் அரசியல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர்களை சந்தித்து இருக்கிறார். இந்த சந்திப்பின்போது உத்தரப் பிரதேச மாநில தேர்தல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் தான் ஆலோசனை தலைவராக நியமனம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் முக ஸ்டாலின், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆகியோர்களை தனது தேர்தல் வியூகத்தின் மூஉலம் முதல்வராக்கிய பிரசாந்த் கிஷோர், உத்தரபிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தியையும் அவர் முதல்வர் ஆக்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த கூட்டணிக்கு தலைமை தாங்குபவர் பிரியங்கா காந்தி என்றும் அவர் தான் முதல்வர் வேட்பாளர் என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version