இந்தியா

பிரசாந்த் கிஷோர் கைக்கு போகிறது காங்கிரஸ்: ஆட்சியை பிடிக்க மெகா திட்டம்

Published

on

காங்கிரஸில் தனக்கு வலிமைமிக்க பதவி கொடுத்தால் கட்சியில் சேரத் தயார் என்றும் தான் எடுக்கும் முடிவுக்கு அனைத்து தலைவர்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ் கட்சியில் சேர பிரசாந்த் கிஷோர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இல்லாமல் இருக்கும் காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட அனைத்து மாநிலங மாநிலங்களிலும் ஆட்சியை இழந்து விட்டது. இதனை அடுத்து காங்கிரஸ் கட்சி இந்த முறை பதவியை பிடித்து ஆக வேண்டும் என்ற நிலையில் இருப்பதால் அதிரடியாக பல திட்டங்களைத் தீட்டியது.

அவற்றில் ஒன்றுதான் பிரசாந்த் கிஷோரை கட்சியில் இணைப்பது. இது குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணிபுரிய பிரசாந்த் கிஷோர் சம்மதம் தெரிவித்ததாகவும் ஆனால் அதே நேரத்தில் பொதுச்செயலாளர் போன்ற முக்கிய பதவி தனக்கு அளிக்க வேண்டும் என்றும் தான் எடுக்கும் முடிவுக்கு அனைத்து தலைவர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்ததாக தெரிகிறது .

இதற்கு சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய பதவி பிரசாந்த் கிஷோருக்கு அளிக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியே அவரது கட்டுப்பாட்டில் வரும் என்றும் கூறப்படுகிறது.

முதல் கட்டமாக 11 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் அதனை அடுத்து 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று உறுதியாக தெரிகிறது. பிரசாந்த் கிஷோருக்கு பாஜக தரப்பில் இருந்து என்ன பதிலடி கொடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

seithichurul

Trending

Exit mobile version