சினிமா செய்திகள்

தர்பார் படத்தில் இணைந்த விடிவி ஹீரோ!

Published

on

என்னது விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் நாயகன் தர்பார் படத்தில் இணைந்துள்ளாரா? சிம்புன்னு டைரக்ட்டா சொல்லலாமே? என்று கேட்பவர்களுக்கு, சிம்பு அல்ல விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் ஹிந்தி ரீமேக்கான ஏக் தீவானா தா படத்தின் நாயகன் பிரதீக் பாப்பர் தான் தர்பார் படத்தில் தற்போது இணைந்துள்ளார்.

லைகா நிறுவனம் 180 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கும் தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது.

இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஹிந்தி பிரபலங்கள் களம் இறங்கியுள்ளனர். ஏக் தீவானா தா படத்தின் நாயகனான பிரதீக் பாப்பர் இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்க உள்ளார். இவர் அறிமுகமாகும் முதல் தமிழ் படமும் இதுதான்.

seithichurul

Trending

Exit mobile version