தமிழ்நாடு

பாகுபலி பிரபாஸ்-ன் பெரியப்பாவை தமிழக ஆளுநராக நியமிக்கத் திட்டம்..?

Published

on

பாகுபலி திரைப்படம் மூலம் உலகப் புகழ் பெற்ற நடிகர் ஆக அங்கீகாரம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். பிரபாஸின் பெரியப்பாவை தற்போது அடுத்த தமிழக ஆளுநர் ஆக நியமிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாம்.

பிரபாஸின் அப்பாவின் அண்ணன் கிருஷ்ணம் ராஜு. 1960, 70-களில் மிகவும் பிரபலமான தெலுங்கு நடிகர் ஆக இருந்தவர் கிருஷ்ணம் ராஜு. இவரின் தம்பியும் பிரபாஸின் அப்பாவுமான சூரியநாராயண ராஜு தெலுங்கு திரை உலகில் தயாரிப்பாளராக இருந்தவர். கிருஷ்ணம் ராஜு தற்போது அரசியல்வாதியாகவும் உள்ளார். இவரைத் தான் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் தமிழக ஆளுநர் ஆக நியமிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கிருஷ்ணம் ராஜு முதலில் காங்கிரஸ் கட்சியின் மூலமாக அரசியலில் இறங்கினார். அதன் பின்னர் பாஜக-வில் இணைந்து காக்கிநாடா தொகுதியில் லோக்சபா எம்.பி ஆகவும் பதவி வகித்தவர். கடந்த 2017-ம் ஆண்டு தமிழக ஆளுநராக கிருஷ்ணம் ராஜுவை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், திடீரென ஏற்பட்ட அரசியல் சூழ்நிலைகளால் ரோசைய்யா தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

Trending

Exit mobile version