சினிமா

பிராணா மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

Published

on

நித்யா மேனனின் பிராணா மோஷன் போஸ்டரை எஸ்.ராஜ் புரடக்‌ஷன்ஸ் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மலையாள இயக்குநர் வி.கே. பிரகாஷ், நித்யா மேனனை மட்டுமே வைத்து ஒரு நபர் நடித்துள்ள பிராணா படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி இசையமைத்துள்ளார். Surround Sync Sound எனும் புதிய ஆடியோ தொழில்நுட்பத்தை எக்ஸ்பீரியன்ஸ் செய்ய திரையரங்கிற்கு வாருங்கள் என பிராணா படத்தின் மோஷன் போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் தொல்லைகளை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மோஷன் போஸ்டரின் மூலம் தெளிவாகியுள்ளது.

இயக்குநர் வி.கே. பிரகாஷின் இந்த புது முயற்சி தொழில்நுட்ப ரீதியில் மிகவும் வலிமையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version