வேலைவாய்ப்பு

பவர் கிரிட் நிறுவனத்தில் வேலை!

Published

on

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பவர் கிரிட் என அழைக்கப்படும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னிஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Executive Trainee (25வது பிரிவு)

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் Electrical, Electrical (Power), Electrical and Electronics, Power Systems Engineering, Power Engineering (Electrical) போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக், பி.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது: 31.12.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ. 60,000 – ரூ.1,80,000 வழங்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.powergridindia.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கேட் 2020 தேர்வில் பெற்றப்படும் மதிப்பெண்கள், குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் ரூ.500, மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் செலுத்தவிதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.powergridindia.com அல்லது https://www.powergridindia.com/sites/default/files/Detailed%20Advt_ET%2025%20Advt_1.pdf?download=1 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.02.2020

seithichurul

Trending

Exit mobile version