தமிழ்நாடு

தமிழக முதல்வரை வாழ்த்தி பவர்ஸ்டார் நடிகர் எழுதிய கடிதம்!

Published

on

தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து பிரபல பவர் ஸ்டார் நடிகர் எழுதிய கடிதம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

தமிழக முதல்வராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பதவி ஏற்ற முக ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். மக்களுக்கு பயனுள்ள பல திட்டங்களை அறிவித்து வருகிறார் என்பதும், குறிப்பாக அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000, பெண்களுக்கு இலவச பேருந்து உள்பட பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தமிழக எதிர்க்கட்சிகளே பாராட்டும் வகையில் ஆட்சி நடத்திவரும் முக ஸ்டாலின் அவர்களுக்கு திரையுலகினர் மற்றும் தொழிலதிபர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சற்று முன் தெலுங்கு பிரபல நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தமிழக முதல்வருக்கு வாழ்த்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் அரசியல் செய்து தான் ஆகவேண்டும். ஆனால் அதே நேரத்தில் ஆட்சிக்கு வந்த பின்னர் அரசியல் செய்யக்கூடாது என்பதை நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்களது ஆட்சி நிர்வாகம் உங்கள் ஆட்சியின் செயல்பாடுகள் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஊக்கம் அளிக்கும் விதத்தில் உள்ளது.

எனவே தமிழகத்தில் நல்லாட்சி செய்து வரும் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என பவர் ஸ்டார் சீனிவாசன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த கடிதம் தற்போது வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version