தமிழ்நாடு

சென்னையில் ஆங்காங்கே தோன்றும் திடீர்ப்பள்ளங்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி!

Published

on

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே திடீரென பள்ளங்கள் ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை எம்ஜிஆர் நகர் மற்றும் கேகே நகர் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பள்ளம் காரணமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இதனை அடுத்து பள்ளத்தை சுற்றி கம்புகளால் வேலிகள் அமைத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தற்கால ஏற்பாட்டை செய்துள்ளனர்.

அதேபோல் சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் ஏற்பட்ட திடீர் பள்ளம் காரணமாக அந்த பள்ளத்தில் டெம்போ டிராவலர் வாகனம் ஒன்று பள்ளத்தில் இறங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அசோக் நகர் காமராஜர் சாலையில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பள்ளத்தில் மழைநீர் விழுந்து வருவதால் ஒரு சிறிய குளம் ஒன்று உருவாகி விட்டதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை எம்ஜிஆர் நகர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் காரணமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளதாகவும் உடனடியாக பள்ளத்தை மாநகராட்சி அதிகாரிகள் தீவிர பணி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளம் ஏற்பட்ட இடத்தில் சிமெண்ட் கலவையை கொண்டு மூடும் பணியும் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை பெரம்பூர் கனமழை காரணமாக திடீரென பள்ளம் ஏற்பட்டு அருகிலிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் சுவர் இடிந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் ஏற்பட்ட மழை காரணமாக திடீரென ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சாலைகளில் பள்ளம் இருந்தால் 1913, 044-25619206 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறித்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version