தமிழ்நாடு

சட்டமன்றத் தேர்தல்: விசிகவுக்கு பானைச் சின்னம் ஒதுக்கீடு!

Published

on

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை தொல்.திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுகவுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை விசிக சந்திக்கிறது. அதேபோல புதுச்சேரியிலும் ஒரேயொரு தொகுதியில் போட்டியிடுகிறது விசிக. இந்த அனைத்துத் தொகுதிகளிலும் பொதுச் சின்னமாக விசிகவுக்கு ‘பானைச் சின்னம்’ ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை வானூர், காட்டுமன்னார்கோவில், செய்யூர், அரக்கோணம், நாகப்பட்டினம் மற்றும் திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது விசிக.

இந்நிலையில் பானைச் சின்னம் ஒதுக்கப்பட்டது குறித்து திருமாவளவன், ‘தமிழகத்தில் ஆறு தொகுதிகளுக்கும் பானை சின்னம். புதுவையில் போட்டியிடும் ஒரு தொகுதிக்கும் பானை சின்னம். நாகரிக வளர்ச்சிக்கான சின்னம் பானை. உழைப்பின் வலிமைக்கான சின்னம் பானை. அறிவின் வெற்றிக்கான சின்னம் பானை. அறிவு+உழைப்பு+நாகரிகம்= விடுதலைச் சிறுத்தைகள் விசிக சின்னம் பானை.

தமிழர்களின் பெருவலிமை பானை. தமிழர்களின் அறிவாளுமை பானை. தமிழர்களின் பேரதிகாரம் பானை’ எனக் கூறியுள்ளார்.

 

Trending

Exit mobile version