தமிழ்நாடு

தங்க தமிழ்ச்செல்வன் திமுக கொள்கை பரப்பு செயலாளராக நியமனம்!

Published

on

அமமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அமமுகவில் மிக முக்கிய தலைவராக வலம் வந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். அதிரடி அரசியலுக்கு பெயர்போன தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவின் மாநில கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வந்தார். ஆனால் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து மோதலில் அவர் அமமுகவிலிருந்து விலகினார்.

இதனையடுத்து அவர் அதிமுகவுக்கு செல்வார் என பேசப்பட்டு வந்தநிலையில் யாரும் எதிர்பார்க்காத நிகழ்வாக அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதனையடுத்து தேனியில் ஸ்டாலின் தலைமையில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி தனது ஆதரவாளர்களை திமுகவில் இணைத்தார்.

இந்நிலையில் அமமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் வகித்த அதே பதவியை திமுகவில் தற்போது அவருக்கு அளித்துள்ளனர். ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோர் ஏற்கனவே கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் நிலையில் மூன்றாவது நபராக தங்க தமிழ்ச்செல்வனும் திமுக கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Trending

Exit mobile version