வேலைவாய்ப்பு

அஞ்சல்துறை தேர்வு: தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத இன்னல்

Published

on

அஞ்சல் துறையின் கிராமின் டாக் சேவக் (GDS) காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தமிழ்நாடு மாநில தேர்வு முறையில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் தவித்து வருகின்றனர். இந்தியா முழுவதும் 40000 கிராமின் டாக் சேவக் காலியிடங்களுக்கு பணி நியமனங்களை அஞ்சல் துறை மேற்கொள்ள உள்ளது. இதில் தமிழ்நாட்டில் 3167 காலியிடங்கள் உள்ளது.

India Post

பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த நியமனங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தில் மதிப்பெண்கள் பாட வாரியாக கேட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில பாட முறையில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்கள் மட்டும் தான் உண்டு. ஆனால் ஆன்லைன் விண்ணப்பத்தில் 6-வது பாடமும் இடம் பெற்றுள்ளது.

6-வது பாடமான தெரிவு மொழி என்பது மற்ற மாநிலங்களில் உள்ளது. இதனால் பிற மாநில மாணவர்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் 6-வது பாடமே இல்லாத இரு மொழி திட்டம் நடைமுறையில் உள்ள தமிழ்நாடு தேர்வர்களுக்கு இது இன்னலாக அமைந்துள்ளது. 6-வது பாட விவரங்களை பூர்த்தி செய்யாவிட்டால் விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. ஜனவரி 27-ஆம் தேதி விண்ணப்பிக்க தொடங்கி 9 நாட்கள் முடிந்துவிட்டது. கடைசி தேதியான பிப்ரவரி 16-க்கு இன்னும் 10 நாட்களே உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அஞ்சல் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்தால் தமிழக தேர்வர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

Trending

Exit mobile version