தமிழ்நாடு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு: புதிய தேதி அறிவிப்பு!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று 15,000 என்று இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு என்று 16 ஆயிரத்தை தாண்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் தேர்வுகள் உள்பட பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தேர்வுத்துறை வாரியம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 6ஆம் தேதி வரை முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது என்பதும் அதற்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவும் காரணத்தால் இந்த தேர்வு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த தேர்வுக்காக வினியோகம் செய்யப்பட்டு இருந்த ஹால் டிக்கெட்டை வைத்து தேர்வு எழுதலாம் என்றும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

 

 

Trending

Exit mobile version