தமிழ்நாடு

முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு: அட்டவணை வெளியீடு

Published

on

முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைபெறும் கால அட்டவணையை சற்றுமுன் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை 1, கணினி ஆசிரியர்கள் நிலை 1 ஆகிய பணிகளுக்கு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை இரண்டு வேளைகளில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கணினிவழி தேர்வு கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் சற்றுமுன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கு அனுமதிச்சீட்டு 1 மற்றும் அனுமதிச்சீட்டு 2 ஆகியவைகளை தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டு உள்ளதாகவும் ஆசிரியர் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் தேர்வர்கள் தங்களது யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி ஆன்லைனில் தேர்வு அட்டவணையை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலம், கணிதம் ,கணினி அறிவியல் பாடங்களுக்கு உரிய தேர்வு அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

 

seithichurul

Trending

Exit mobile version