சினிமா

போர் தொழில் விமர்சனம்: பக்கா கிரைம் த்ரில்லர்.. அசோக் செல்வன், சரத்குமார் அசத்தல்!

Published

on

இளம் பெண்களை குறிவைத்து திருச்சி நெடுஞ்சாலையில் ஒரே பாணியிலான சீரியல் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. எந்தவித ஆதாரமும் கிடைக்காததால் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் லோக்கல் போலீஸ் கேஸை முடிக்க முடியாமல் தவிக்கிறது. இதனால், இந்த வழக்கு கிரைம் பிரான்ச் அதிகாரியான எஸ்.பி.லோகநாதனிடம் (சரத்குமார்) ஒப்படைக்கப்படுகிறது. அவரிடம் புதிதாக டிஎஸ்பியாக சேரும் அனுபவமில்லாத பிரகாஷ் (அசோக் செல்வன்) சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் முயற்சியில் அந்த விசாரணையில் ஈடுபடுகிறார்.

இடைவேளையின் போதே சீரியல் கில்லர் யார்? எதற்காக அவர் இப்படியான கொடூர கொலைகளை செய்கிறான்? அதற்கான காரணம் என்ன – இதையெல்லாம் சீட் எட்ஜ் த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கும் படம்தான் ‘போர் தொழில்’.

#image_title

திரைக்கதையையும் படத்தின் மேக்கிங்கையும் எந்தவொரு பிசிரு தட்டாமல் இயக்கி உள்ளார் இயக்குநர் விக்னேஷ் ராஜா. படத்தின் ஒவ்வொரு காட்சியும் கதையின் ஓட்டத்திற்கு தேவையான ஒன்றாகவே உள்ளது.

படிப்பில் ‘கோல்டு’ மெடல் வாங்கி வைத்துக்கொண்டு கிரைம் ஸ்பாட்டுக்கு வரும் அசோக் செல்வன் கதாபாத்திரத்தை அனுபவம் வாய்ந்த உயர் அதிகாரியான சரத்குமார் அணுகும் விதமும், இரண்டு கதாபாத்திர முரண்களும் கதையை சுவாரஸ்யமாக மாற்றி உள்ளது. அதில், சரத்குமாரின் ஒன் லைனர்கள் பக்கா டாமினேஷன்.

 

குறிப்பாக சீரியல் கொலைகள் குறித்து சரத்குமார் விவரிக்கும் காட்சி, கொலைகாரனை நெருங்கும் காட்சியும், இடைவேளை என விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி கடக்கும் முதல் பாதி அட போட வைக்கிறது. ‘பயந்தவனெல்லாம் கோழை கிடையாது; பயந்து ஓட்றவன் தான் கோழை’, ‘உங்க வேலைய நீங்க சரியா பாத்தீங்கன்னா; எங்க வேலை கம்மியாகும்’, ‘கொலைகரானுக்கு கொலை ஒரு அடிக்‌ஷன்’, ‘நம்ம பண்ற வேலை நமக்கு மரியாதையை தேடித்தரும்’ போன்ற டயலாக் டாப் நாட்ச்.

சரத்குமார் மற்றும் அசோக் செல்வனுக்கு எழுதிய அளவுக்கு வலுவான கதாபாத்திரத்தை ஹீரோயின் நிகிலா விமலுக்கு இயக்குநர் எழுதவில்லை. ஆனால், அவரையும் வைத்து ஒரு இடத்தில் விளையாடி இருப்பது அப்ளாஸ் அள்ளுகிறது.

ஜேக்ஸ் பிஜாயின் பிஜிஎம் படத்திற்கு வேறலெவல் வெயிட்டேஜை கூட்டுகிறது. கிரைம் த்ரில்லர் படம் பார்க்கிறோமா ஹாரர் படத்தை பார்க்கிறோமா என்கிற உணர்வை அவரது இசை ரசிகர்களுக்கு அழகாக கூட்டி ஸ்கோர் செய்கிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங், கலை இயக்கம் என அனைத்து துறையுமே இணைந்து ஒரு பர்ஃபெக்ட்டான த்ரில்லர் படத்தைக் கொடுத்துள்ளது.

ஆனால், அசோக் செல்வன், சரத்குமாருக்காக பொது மக்கள் இந்த படத்தை பார்க்க தியேட்டரை நோக்கி வருவார்களா? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. மீறி வந்தால் படம் பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும். இல்லையென்றால், ஒரு மாதம் கழித்து ஓடிடியில் பார்த்து ரசிகர்கள் பாராட்டுவார்கள்!

போர் தொழில் – போரடிக்காத படம்!
ரேட்டிங் – 4/5.

author avatar
seithichurul

Trending

Exit mobile version