உலகம்

கன்னியாஸ்திரிகள் மீதான பாலியல் வன்கொடுமை: ஒப்புக் கொண்டார் போப் பிரான்சிஸ்!

Published

on

பாதிரியார்கள், பேராயர்களால் கன்னியாஸ்திரிகள் மற்றும் பெண்கள் பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கிறது. இவை அனைத்தும் உண்மை தான் என கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுவரை இருந்த போப்கள் யாரும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொண்டதில்லை. ஆனால் முதல்முறையாக நேற்று ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் போப் பிரான்சிஸ். இதனையடுத்து தனது பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் போது செய்தியாளர்களை சந்தித்தார் போப் பிரான்சிஸ். அப்போது கன்னியாஸ்திரிகள் மீதான பாதிரியார்களின் பாலியல் வன்கொடுமை, பாலியல் தொந்தரவுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த போப் பிரான்சிஸ், சில பாதிரியார்கள், பேராயர்களால் கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர். புதிதாக சபை கூடும் இடங்களில்தான் இது அதிகமாக நடக்கிறது. இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதனால் பல பாதிரியார்கள் மற்றும் பேராயர்களை வாடிகன் தலைமையகம் நீக்கியுள்ளது.

இந்த பிரச்சனைக்கு நீண்ட கால தீர்வை கொண்டுவர முயற்சி செய்து வருகிறோம். கன்னியாஸ்திரிகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான பிரச்சனைகளுக்காக வாட்டிகன் நீண்ட காலமாக போராடி வருகிறது. இது போன்ற கொடுமைகளை முற்றிலும் தடுக்க இன்னும் அதிகமாக தொடர்ந்து போராடுவோம் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version