சினிமா செய்திகள்

கிருத்திகா உதயநிதி படத்தில் இணைந்த நான்கு நட்சத்திரங்கள் இவர்கள்தான்!

Published

on

நடிகர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி வெப்தொடர் ஒன்றை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது என்பது தெரிந்ததே. ஏற்கனவே ’வணக்கம் சென்னை’ ’காளி’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதியின் மூன்றாவது படைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெப்தொடரில் காளிதாஸ் ஜெயராமன் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்றும், தன்யா ரவிச்சந்திரன் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த வெப்தொடருக்கு பிரபல ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவாளராக பணிபுரிவதாகவும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்க உள்ள நான்கு நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகை விஜி சந்திரசேகர், நடிகை பூர்ணிமா பாக்யராஜ், நடிகர் கருணாகரன், மற்றும் நடிகர் காளி வெங்கட் ஆகிய நால்வரும் இந்த படத்தில் இணைந்து உள்ளதாகவும் மேலும் சில பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் மூன்று மாதத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து இந்த ஆண்டு இறுதியில் இந்த தொடர் ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version