கிரிக்கெட்

மோசமான ஃபார்ம், அதிரடியாக தூக்கப்பட்ட துணை கேப்டன் கே.எல்.ராகுல்!

Published

on

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் தொடர் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் வென்று முன்னிலை வகிக்கும் இந்திய அணியின் அடுத்த இரண்டு போட்டிகள் மற்றும் ஒரு நாள் தொடருக்கான வீரர்கள் பட்டியிலை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதில் டெஸ்ட் போட்டிக்கான துணை கேப்டன் பொறுப்பிலிருந்து கே.எல்.ராகுல் அதிரடியாக தூக்கப்பட்டுள்ளார்.

#image_title

கடந்த சில ஆட்டங்களாக கே.எல்.ராகுல் மோசமான ஃபார்மில் உள்ளார். பெரிய அளவில் ரன் குவிக்காமல் மோசமாக விளையாடி வரும் கே.எல்.ராகுலுக்கு தொடர்ந்து அணியில் இடம் கொடுக்கப்பட்டு வருகிறது. இது இளம் வீரர்களின் வாய்ப்பை பறிக்கும் செயல் என முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கருத்து தெரிவித்திருந்த நிலையில் பிசிசிஐ அவரை டெஸ்ட் போட்டிக்கான துணை கேப்டன் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. அதில், டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளார். மேலும் ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாக ரோகித்தும், துணை கேப்டனாக பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

#image_title

இந்திய டெஸ்ட் அணி வீரர்கள்: ரோகித் ஷர்மா ( கேப்டன்) கே.எல்.ராகுல், சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஸ்ரேயஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.

ஒருநாள் தொடர் இந்திய அணி வீரர்கள்: ரோகித் ஷர்மா ( கேப்டன்) சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்சர் பட்டேல், ஜெய்தேவ் உனத்கட்.

Trending

Exit mobile version