சினிமா செய்திகள்

பொன்மாணிக்கவேல் டீஸர் ரிலீஸ்!

Published

on

பிரபுதேவா முதன்முறையாக போலீசாக நடித்து ஆக்‌ஷனில் கலக்கியுள்ள பொன்மாணிக்கவேல் படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.

ஏ.சி. முகில் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் பொன்மாணிக்கவேல் படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

கோயில் சிற்பங்கள் கடத்தும் கும்பலை பிடிக்கும் காவலதிகாரி பொன்மாணிக்கவேலின் கதையாக இருக்கும் என படத்தின் டைட்டில் வெளியாகும் போது பேசப்பட்டன.

ஆனால், டீஸரில் இந்த படம் முற்றிலும் வேறு விதமான படம் என்றும், பொன்மாணிக்கவேல் பெயர் வெறும் டைட்டிலுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது.

பிரபுதேவாவின் நடிப்பில் தேவி 2 படமும் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், பொன்மாணிக்கவேல் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. சார்லி சாப்ளின் 2 படத்தை போல இல்லாமல், இரு படங்களும் பிரபுதேவாவுக்கு நல்ல படங்களாக அமைய வேண்டும் என்பதே காசு கொடுத்து தியேட்டருக்கு சென்று பார்க்கும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version