பிற விளையாட்டுகள்

பிவி சிந்துவை அடுத்து பூஜா ராணியும் தோல்வி: கலைந்தது பதக்க கனவு

Published

on

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு மட்டுமே பளுதூக்கும் போட்டியில் ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மேலும் சில பதக்கங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்தடுத்து வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து சீன வீராங்கனை இடம் போராடி தோல்வி அடைந்தார். இதனால் அவருக்கு பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு குறைந்து உள்ளது. நாளை நடைபெறும் 3வது இடத்திற்கான போட்டியில் பிவி சிந்து வெற்றி பெற்றால் வெண்கல பதக்கம் மட்டும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தருவார் என்று நம்பிக்கையுடன் இருந்த பூஜா ராணியும் இன்று தோல்வி அடைந்ததால் இந்தியாவின் பதக்க கனவு கலைந்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை 75 கிலோ எடை பிரிவில் இன்று இந்தியாவின் பூஜா ராணி சீனாவின் லீ கியான் என்பவர் உடன் மோதினார். இரு வீராங்கனைகளும் ஆவேசமாக மோதிய போதிலும் சீன வீராங்கனை 5-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவில் பூஜா ராணியை வீழ்த்தினார்

இதனை அடுத்து இந்தியாவின் பூஜா ராணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததோடு பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version