சினிமா செய்திகள்

பூஜா ஹெக்டே ’அஜித் 61’ படத்தில் வில்லியா? பரபரப்பு தகவல்

Published

on

தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே, ’அஜித் 61’ திரைப்படத்தில் வில்லியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகவிருக்கும் திரைப்படம் அஜித் 61. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னை அண்ணாசாலை போல் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

pooja
மூன்றாவது வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன .

’அஜித் 61’படத்தில் ஹீரோயினியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒன்று நெகட்டிவ் கேரக்டர் என்றும் அந்த கேரக்டருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும் அவருடைய கேரக்டரும் கிட்டத்தட்ட வில்லத்தனமான கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Trending

Exit mobile version