சினிமா செய்திகள்

பூஜா தேவரியா செல்போனும் ஹேக் செய்யப்பட்டதாம்!

Published

on

நடிகை ஹன்சிகாவின் சமூக வலைதளங்கள் ஹேக் செய்யப்பட்டு ஹன்சிகாவின் ஹாட் பிகினி புகைப்படங்கள் லீக் செய்யப்பட்ட நிலையில், தற்போது நடிகை பூஜா தேவரியாவின் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாகவும், தனது நம்பரை டெலிட் செய்யும்படியும் கோரியுள்ளார்.

தனது வாட்ஸப் நம்பரில் இருந்து யாருக்காவது எந்த புகைப்படங்களோ, மெசேஜ்களோ வந்தால் அதனை தயவு செய்து யாருக்கும் பகிரவோ, ரிப்ளை செய்யவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொதுவாக செல்போன்கள் ஹேக் செய்யப்படும் பிரச்சனைகள் நடிகைகளுக்கே வருவது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், அவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் ஒருவேளை அவர்களின் செல்போன்களில் பதிவு செய்யப்பட்டிருந்தால், ஹேக்கர்களுக்கு அது காசு சம்பாதித்து கொடுக்கும் உக்தியாக மாறும் என்பதால், இப்படி செய்கின்றனர்.

மேலும், சில நடிகைகளே தங்களின் அந்தரங்க புகைப்படங்களை வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் காலத்தில் லீக் செய்து புதிய பட வாய்ப்புகளையும் தேடும் ஆயுதமாகவும் இதனை பயன்படுத்துகின்றனர்.

நடிகை பூஜா தேவரியா, இறைவி, ஆண்டவன் கட்டளை போன்ற சில படங்களில் மட்டுமே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version