சினிமா செய்திகள்
பொன்னியின் செல்வன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பார்த்திபன்!
![EAhj14xUwAEr7sk - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/EAhj14xUwAEr7sk.jpg)
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி பலரும் பெருமுயற்சி செய்து இதுவரை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவுள்ளார் என்றும், அதில், முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர் என்ற தகவலும் அவ்வப்போது அரசல் புரசலாக வந்து கொண்டிருந்தன.
ஆனால், மணிரத்னம் தரப்பில் இருந்தோ எந்தவொரு நடிகர், நடிகைகளின் தரப்பில் இருந்தோ இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை ஏதும் வெளியாகவில்லை.
நடிகர் விக்ரம், தான் அடுத்து மணிரத்னம் படத்தில் நடிக்க உள்ளேன் என்ற ஒரு குறிப்பை மட்டும் வெளியிட்டிருந்தார்.
ஆனால், தற்போது நடிகர் பார்த்திபன், மணிரத்னத்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, ”படத்தைப் பார்த்தாலே பொருள் விளங்கும், திரு மணிரத்னம் படைப்பில்-என் பங்களிப்பில்-பெருங்களிப்பில் ‘பொன்னியின் செல்வன்’. அப்படத்திற்காக Spelling மட்டுமே கற்றிருந்த நான் Swimming கற்கிறேன்!”
என ட்வீட்ச் செய்துள்ளார். இதனால், பொன்னியின் செல்வன் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் நடிக்க உள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.