சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் கன்ஃபார்ம் – விக்ரம் அதிரடி பேட்டி!

Published

on

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் இயக்குநர் மணிரத்னம் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கான நடிகர்கள், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக ஒரு பெரிய மல்டி ஸ்டாரர் பட்டியலையும் சில மாதங்களுக்கு முன்பு மீடியாக்களில் வெளியிட்டனர்.

கார்த்தி, சிம்பு, விக்ரம், ஜெயம் ரவி, விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, அமிதாப், சத்யராஜ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பட்டியல் பலமாக இருந்தது.

ஆனால், மணிரத்னத்திடம் இருந்தும், அந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நடிகர்களிடம் இருந்தும் இது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளியாகாத நிலை ஏற்பட்டு இருந்தது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் தான் நடிக்கவுள்ளது உறுதி என சமீபத்தில் நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம் ஓபனாக கூறியுள்ளார்.

இதனால், விரைவில் பொன்னியின் செல்வன் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version