சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் எப்போது திரைக்கு வரும்? பாடல், டீசர், ட்ரெயர்லர் வெளியீடு எப்போது?

Published

on

மணிரத்தினம் இயக்கத்தில் இந்த ஆண்டு திரைக்கு வந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் பாகம் 1. எனவே பொன்னியின் செல்வன் பாகம் 2 படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு பெரும் அளவில் உள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரையில் எந்த ஒரு படமும் செய்யாத அளவிற்கு மிகப் பெரிய வசூலை பெற்றுள்ளது பொன்னியின் செல்வன்.

உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் 540 கோட் ரூபாய்க்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளது.

தொடர்ந்து பொன்னியின் செல்வன் பாகம் 2 2023-ம் ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், படத்தின் டீசர், பாடல்கள் வெளியீடு நிகழ்வுகள் பிப்ரவரி 2023 முதல் தொடங்கும் என தெரிய வந்துள்ளது.

மேலும் பொன்னியின் செல்வன் பாகம் 2 ஏப்ரல் 28-ம் தேதி கோடையில் ரிலீஸ் ஆகும் தகவல்கள் கூறுகின்றன.

பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஷ்வர்யா ராய் பச்சன், திரிஷா, உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில், சரத் குமார், ஜெய்ராம், பிரகாஷ் ராஜ், பிரபு, ரஹ்மான், விக்ரம் பிரபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

பொன்னியின் செல்வன் பாகம் 1 உடன் சேர்த்து பொன்னியின் செல்வன் பாகம் 2-ன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் கிராப்பிக்ஸ் பணிகள் தான் நடைபெற்று வருகிறது.

எனவே பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்தின் டீசர், பாடல், ட்ரெய்லர், படம் ரிலீஸ் தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

seithichurul

Trending

Exit mobile version