சினிமா

சம்மரில் யாரும் இந்த தேதியில் வந்துடாதீங்க.. ரிலீஸ் தேதியை அறிவித்த பொன்னியின் செல்வன் 2 படக்குழு!

Published

on

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2ம் பாகம் அடுத்த ஆண்டு எந்த தேதியில் வெளியாகிறது என்கிற சூப்பர் ஹாட் அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டு ரசிகர்களுக்கு நியூ இயர் ட்ரீட்டை செம அட்வான்ஸாக கொடுத்துள்ளது.

வரும் பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், பெரும் போட்டி நிலவ உள்ளது. இந்நிலையில், ஏப்ரல் மாதம் இந்த தேதியில் யாரும் வந்துடாதீங்க.. அப்புறம் நஷ்டமாச்சுன்னா கம்பெனி பொறுபல்ல என்பது போல இப்பவே ரிலீஸ் தேதியை புதிய புரமோவுடன் படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு தனுஷின் நானே வருவேன் பொன்னியின் செல்வன் படத்துடன் போட்டிப் போட்டு பலத்த நஷ்டம் அடைந்தது போல அடுத்த ஆண்டு எந்த படமும் இந்த தேதியில் வந்துடாதீங்க என்பது போலவே பயங்கர அலர்ட்டை பொன்னியின் செல்வன் படக்குழு கொடுத்துள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலிபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் 2ம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய வசூல் வேட்டையாக 500 கோடி வரை வசூல் ஈட்டித் தந்து மிகப்பெரிய சரித்திர சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

வரும் சம்மருக்கு ரஜினிகாந்தின் ஜெயிலர், சிவகார்த்திகேயனின் மாவீரன் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version