தமிழ்நாடு

முடிந்தது பொங்கல் விடுமுறை! ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் உறுதியாகாததால் சென்னை செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி!

Published

on

பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில், சென்னை செல்லும் ரயில்களில் கூட்ட நெரிசலால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைய முன்னிட்டு தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதே போல், பண்டிகை  விடுமுறை முடிந்த பிறகு ஒரே நாளில் சென்னை திரும்பும் போதும் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படும்.

இந்நிலையில் இந்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ரயில்களில் முன்பதிவு கடந்த மாதமே முடிவடைந்தது. நேற்று பலரும் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பினர். இதனால் நெல்லை, மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட ரயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதியது. காத்திருப்போரின் பட்டியலிலும் உறுதிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக தென்னக ரயில்களில் அனைத்து வகுப்புகளிலும் இருக்கைகள் உறுதி செய்யப்படாமலேயே சுமார் 50 மேற்பட்ட பயணிகள் இருந்தனர். குறிப்பாக சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸில் இரண்டாம் வகுப்பு இருக்கைகளில் 150க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருப்பு பட்டியலில் இருந்தனர். இதனால் மக்கள் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சமூக இடைவெளி நசுங்கியது.

முன்னதாக கடந்த நான்கு மாதங்களாக கொரோனா ஊரடங்கால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. அவசர காலத்திற்கென சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. முன்பதிவு செய்யப்பட்டோர் மட்டுமே ரயில் நிலையங்களில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version