சினிமா செய்திகள்

பொங்கல் ரேசும் பொய்யா? கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Published

on

தீபாவளி பண்டிகைக்கு சர்கார் படத்திற்கு போட்டியாக அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் என்.ஜி.கே படங்கள் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டன. மேலும், தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா, திமிரு புடிச்சவன் போன்ற பல படங்களும் தீபாவளி ரிலீஸ் என கூறி கடைசியில் ஜகா வாங்கின.

இந்நிலையில், வரும் பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் என்.ஜி.கே, சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி இன்னும் சில படங்களும் பொங்கலை குறிவைத்துள்ளன.

இவை அனைத்தும் ஒரே நாளில் ரிலீசாவது உண்மையில் சாத்தியமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விளம்பரத்திற்காக இப்படி கூறிவிட்டு பல படங்கள் கடைசி நேரத்தில் திரும்பவும் பின் வாங்கும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதுவும் சிம்புவின் வந்தா ராஜாவாதான் படம் எல்லாம் பொங்கல் ரேசில் கலந்து கொள்ளாது என திட்டவட்டமாக டிரால் செய்து வருகின்றனர்.

அப்படி அனைத்தும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனால், தயாரிப்பாளர்கள் தலையில் துண்டை போட்டுக் கொண்டு தான் போவார்கள் என்றும் கூறியுள்ளனர்.

இறுதி நேரத்தில் இந்த போட்டி மாற அதிக வாய்ப்புள்ளது. இருந்தாலும், அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினியின் பேட்ட ஆகிய இரு படங்களும் சர்கார் வசூலை வீழ்த்த வேண்டும் என்றால் அதிக தியேட்டர்களில் ரிலீசாக வேண்டும். ஆனால், இப்படி பல முனை போட்டிகளுடன் ரிலீஸ் ஆனால், நிச்சயம் அது முதலுக்கே மோசமாகிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version