தமிழ்நாடு

பொங்கல் தொகுப்பு டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

Published

on

பொங்கல் தொகுப்பு பொருள்கள் இன்று முதல் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்பதும் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பொங்கல் தொகுப்பை வழங்கும் பணியை ஆரம்பித்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பொங்கல் தொகுப்பு கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பணம் வழங்காததால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் ஏற்கனவே பொங்கல் தொகுப்பு பெறுவதற்கு அரிசி அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த டோக்கன் பெறாதவர்கள் வரும் 10ஆம் தேதிக்கு பின்னர் ரேஷன் கடைகளுக்கு சென்று தங்கள் அரிசி ரேஷன் அட்டையை காண்பித்து பொங்கல் தொகுப்புக்கான டோக்கனை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டோக்கன் வாங்கியவர்கள் பொங்கல் தொகுப்பு பொருள்களை எதிர்பாராத காரணத்தினால் வாங்க முடியாவிட்டால் அவர்களுக்கும் பத்தாம் தேதிக்கு மேல் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கும் வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் முதலிலேயே கொடுக்கப்பட்டு விட்டதால் அந்த டோக்கனுக்குரிய நாளில் மட்டும் அரிசி அட்டைதாரர்கள் பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். இதனால் கூட்ட நெரிசலில் இருந்து தவிர்க்கப்பட்டுள்ளது என்பதும் தனிமனித இடைவெளியை கடைபிடித்து பொங்கல் தொகுப்பை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version