தமிழ்நாடு

கடலூர், புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் சுமார் 20 செ.மீ மழை; கொட்டித்தீர்த்த வரலாறு காணாத கனமழை!

Published

on

கடலூர் மற்றும் புதுச்சேரியில் கடந்த வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த இரண்டு இடங்களிலும் சுமார் 20 சென்டி மீட்டர் மழைப் பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரலாறு காணாத மழை குறித்து பிரபல வானிலை வல்லுநர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், ‘கடலூரில் இதற்கு முன்னர் பதிவான மழை குறித்தான பதிவுகள் தகர்க்கப்பட்டு உள்ளன. நவம்பர் மாதம் முதல் கடலூருக்கு விதிக்கப்பட்ட சாபம் தொடருகிறது. கடலூர் மற்றும் புதுச்சேரியில் இது வரை பெய்யாத அளவுக்கான மழைப் பெய்துள்ளது.

கடலூரில் இன்று காலை 8:30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 186 மில்லி மீட்டர் மழைப் பெய்துள்ளது. இது வரலாறு காணாத பிப்ரவரி மழையாகும். கடந்த 1930 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 119 மில்லி மீட்டர் மழைப் பெய்தது.

அதேபோல புதுச்சேரியில் இன்று காலை 8:30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 192 மில்லி மீட்டர் மழைப் பெய்துள்ளது. இது வரலாறு காணாத பிப்ரவரி மழையாகும். கடந்த 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 117 மில்லி மீட்டர் மழைப் பெய்தது’ எனத் தகவல் தெரிவித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version