தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீட்டு அரசாணை ரத்து: -விரைவில் புதிய அறிவிப்பாணை வெளியீடு

Published

on

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்படுவதாகவும் விரைவில் புதிய தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு தொடர்பாக ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2006ஆம் ஆண்டு நடந்த தேர்தலை போன்று பழைய முறைப்படியே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாகவும் வரும் அக்டோபர் 12ஆம் தேதிக்குள் புதிய தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் செப்டம்பர் 22ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் பட்டியலினத்தவர் உள்பட ஒரு சிலருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்பதால் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது தேர்தல் ஏற்பாட்டில் குளறுபடி இருப்பதாகவும், எனவே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்துவிட்டு ஐந்து நாட்களில் இட ஒதுக்கீடு சட்டவிதிகளை பின்பற்றி புதிய தேர்தல் அட்டவணையை வெளியிட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இட ஒதுக்கீடு குறித்த அரசாணையை ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் புதிய தேர்தல் அட்டவணை அக்டோபர் 12ஆம் தேதிக்குள் வெளிவர வாய்ப்பு இருப்பதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Trending

Exit mobile version