தமிழ்நாடு

அனாதை பிள்ளைக்கு அப்பன் யாரென்று தேடாமல் தோல்வியை பகிர்வோம்: அதிமுகவை தாக்கும் பொன்னார்!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி தமிழகத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த தேர்தல் தோல்விக்கு பாஜக தான் காரணம் என அதிமுகவில் குரல்கள் எழுந்தது. இந்நிலையில் இதற்கு தமிழக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்ததால் சிறுபான்மையினர்களின் வாக்குகளை முழுவதும் இழக்க நேரிட்டது. பாஜக மீதான எதிர்ப்பு அதிமுகவையும் பாதித்ததால் தோல்வியைத் தழுவினோம் என விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார் அமைச்சர் சி.விசண்முகம். மேலும் அதிமுக கட்சிக்குள்ளும் இந்த கருத்து நிலவி வருகிறது.

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணனிடம் அதிமுக கூட்டணி தொடருமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், கூட்டணி தொடருமா? தொடராதா என்பது அந்தந்த கால சூழ்நிலைக்கு தக்கப்படி நடக்கட்டும். தேர்தலை பொறுத்துத்தான் கூட்டணி இருக்கும் என்றார்.

மேலும், தேர்தல் முடிவு என்று வரும் பொழுது, ஒருவரின் தலையில் அனைத்தையும் சுமத்துவது தவறான கருத்து. சேர்ந்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவியிருக்கிறோம். ஆனால் நாடு முழுவதும் பாஜக மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. அதனால் அனாதை பிள்ளைக்கு அப்பன் யாரென்று தேடும் வேலைகள் வைக்காமல், தோல்விக்கான பொறுப்பை அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

seithichurul

Trending

Exit mobile version