தமிழ்நாடு

கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் அறிவிப்பு!

Published

on

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகவும் அதுபோக கன்னியாகுமாரி மக்களவை தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்படுவதாகவும் நேற்று நள்ளிரவு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் கையெழுத்திட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் கன்னியாகுமரி தொகுதி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட பொன்ராதாகிருஷ்ணன் அவர்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார் என பாஜக தலைமை அறிவித்துள்ளது. இதனால் பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த தொகுதியில் பொன்ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால் மீண்டும் அவர் மத்திய அமைச்சர் ஆவது உறுதி என்றும் தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சராகும் ஒரே அமைச்சர் அவராகத்தான் இருப்பார் என்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர்.

கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிடுவது காங்கிரஸ் வேட்பாளரா? அல்லது திமுக வேட்பாளரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version