தமிழ்நாடு

மீண்டும் பொன்.மாணிக்கவேல்: பணிக்காலத்தை நீட்டித்தது உயர்நீதிமன்றம்!

Published

on

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியான பொன்.மாணிக்கவேல் இன்றுடன் தனது பணியை முடித்து ஓய்வு பெற இருந்த நிலையில் அவருக்கு தற்போது பணி நீட்டிப்பு வழங்கி கூடுதலாக ஒரு ஆண்டு பணி செய்ய அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழக அரசு சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பித்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து டிராபிக் ராமசாமி மற்றும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரித்தனர்.

அப்போது, சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்துசெய்தது சென்னை உயர்நீதிமன்றம். தமிழக அரசின் இந்த அரசாணை சட்டவிரோதமானது எனக்கூறி சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிப்பார் என்றும் மேலும் ஒரு வருடத்திற்கு பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாகவும் நியமித்து உத்தரவிட்டது.

இன்று மாலையுடன் ஓய்வு பெற இருந்த பொன்.மாணிக்கவேல் இன்னும் ஓராண்டிற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version