இந்தியா

ஆண்குழந்தைகளுக்கு ‘பொன்மகன்’ சேமிப்பு திட்டம்: ரூ.1000 செலுத்தினால் இத்தனை லட்சமா?

Published

on

பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் என்ற திட்டம் இந்திய அரசின் தபால் துறையால் அறிமுகம் செய்யப்பட்டு சில ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது தெரிந்ததே. இந்த திட்டம் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும், ஏராளமானோர் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பெண் குழந்தைகளை அடுத்து ஆண் குழந்தைகளுக்கும் சேமிப்பு திட்டம் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு பொன்மகன் சேமிப்பு திட்டம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின்படி தபால் நிலையங்களில் மாதம் ரூபாய் 1000 செலுத்தினால் 15 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான மெச்சூரிட்டி தொகை கிடைக்கும் என்றும் எனவே ஆண் குழந்தை வைத்துள்ள பெற்றோர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் ரூபாய் 1000 என்றால் ஒரு வருடத்திற்கு 12 ஆயிரம் என்றும் 15 ஆண்டுகளில் நாம் கட்டியிருக்கும் தொகை ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஆக இருக்கும் என்றும், ஆனால் நமக்கு கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் கிடைக்கும் வகையில் இந்த திட்டம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் ஆண்குழந்தை வைத்துள்ள பெற்றோர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சமாக ரூபாய் 500 முதல் அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் ரூபாய் வரை இந்த திட்டத்தில் கட்டிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் இணைய வேண்டும் என்றால் பெற்றோர்கள் தங்கள் ஆண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் ஆதார் அட்டை புகைப்படங்கள் ஆகியவற்றை வைத்து அஞ்சல் அலுவலகத்தில் விண்ணப்பத்தை வாங்கி கணக்கை தொடங்க வேண்டும். மாதம் ரூபாய் 1000 செலுத்தி வந்தால் 15 ஆண்டுகளில் 5 லட்சத்து 27 ஆயிரத்து 440 வரை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி 5 ஆண்டுகளுக்கு பிறகு அவசர தேவைக்காக கடன் பெறும் வசதியும் உள்ளது என்றும் இந்திய அரசின் தபால்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகுந்த பாதுகாப்புடன் கூடிய நல்ல வட்டி தரக்கூடிய இந்த திட்டத்தில் ஆண் குழந்தை வைத்துள்ளவர்கள் சேமிக்கும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

seithichurul

Trending

Exit mobile version