தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: தமிழக அரசு அரசாணை!

Published

on

பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை சிபிசிஐடி போலிசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை தற்போது சிபிஐக்கு மாற்றியுள்ளது தமிழக அரசு.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு பின்னர் பாலியல் பலாத்காரம் செய்துவந்த கும்பல் ஒன்று சமீபத்தில் கைது செய்யப்பட்டது. இவர்களால் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் அரசியல் பலமும், சாதிய பலமும் நிறைந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனையடுத்து மாநில காவல் துறையிடம் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு இந்த வழக்கை மாற்றியது தமிழக அரசு. அதன்படி சிபிசிஐடி தனது விசாரணையை தொடங்கியது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அரசியல் பின்புலம் இருப்பதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழக உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version