தமிழ்நாடு

ரஜினியை அரசியலுக்கு அழைத்தேனா? கமல்ஹாசன் பதில்!

Published

on

கடந்த சனிக்கிழமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்த நிலையில் இருவரும் இணைந்து அரசியலில் குதிக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறின.

இந்த நிலையில் கமல் உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை என ஏற்கனவே ரஜினிகாந்த் தரப்பினர் தெளிவுபடுத்தி நிலையில் தற்போது இந்த சந்திப்பின்போது அரசியலுக்கு ரஜினியை அழைத்தேனா? என்ற கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

ரஜினிகாந்தை சந்தித்தபோது அரசியல் எதுவும் பேசவில்லை என்றும், உடல்நிலை சரியில்லை என்று கூறிய பிறகும் அரசியலில் இணைந்து பணியாற்ற அவரை நான் அழைப்பது நல்ல நண்பனுக்கு அடையாளமாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ரஜினி கமல் இணைந்து வரும் தேர்தலை சந்திக்க வாய்ப்பு இல்லை என்றே அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அதே நேரத்தில் ரஜினி இந்த முறை யாருக்கும் வாய்ஸ் கொடுக்க மாட்டார் என்றும் அவருடைய ரசிகர்கள் அவரவர் விருப்பப்படியே தேர்தலில் வாக்களிக்கலாம் என்று மட்டும் கூறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இன்னும் ஒரு சில குறிப்பிட்ட ரசிகர்கள் மட்டும் கடைசி நேரத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கையை இன்னும் கைவிடாமல் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version