சினிமா செய்திகள்

காசுக்காக அரசியல் ட்வீட் – 30க்கும் மேற்பட்ட நடிகர்கள், நடிகைகள் மோசடி!

Published

on

லோக்சபா தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், நடிகர்கள் மற்றும் நடிகைகளை ட்விட்டரில் அரசியல் ட்வீட் போடும் படியும், அதற்கான பணத்தை தருவதாகவும் அரசியல் கட்சிகள் அணுகியுள்ளனர்.

பல லட்சம் ரசிகர்கள் நடிகர்களை பின் தொடர்வதால், அவர்களின் ஒவ்வொரு ட்வீட்டும் ஓட்டாகும், என்றும் இளைஞர்களை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மடக்கி ஓட்டுக்களை அள்ள முடியும் என ஆயத்தமாகியுள்ளனர்.

இதில், நடிகை சன்னி லியோன், ஜாக்கி ஷெராஃப், விவேக் ஓபராய் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நடிகர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதை கோப்ரா போஸ்ட் வீடியோ ஆதாரத்துடன் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளதால், பாலிவுட்டில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

பெரும்பாலும், பாஜக ஐடி விங் தான் இந்த ஏற்பாடை செய்துள்ளதாகவும், மற்ற கட்சிகளும், இதே நடைமுறை பின்பற்றவும் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version