சினிமா

சர்கார் படத்துக்கு அரசியல் விளம்பரம் ஆரம்பம்!

Published

on

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். படத்தில் வரும் அரசியல் காட்சிகள் அதிமுகவை சீண்டும் விதமாக உள்ளதாக இருப்பதாகவும், வரலட்சுமிக்கு ஜெயலலிதாவின் இயற்பெயர் வைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் எனவும் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழு நீக்கிவிட்டால் பிரச்சனை இல்லை என்றும், வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லது அல்ல என்றும், சர்கார் படத்தை பற்றிய சில தகவல்கள் அரசுக்கு வந்துள்ளது. காட்சிகள் நீக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்து எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மெர்சல் படத்திற்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தமிழிசை செளந்தரராஜன், எச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்து படத்தை மிகப்பெரிய ஹிட்டாக மாற்றினர்.

சர்கார் படத்திற்கு இதுவரை எந்தவொரு கட்சி தலைவர்களும் குரல் கொடுக்காத நிலையில், முதல் ஆளாக கடம்பூர் ராஜூ எதிர்ப்பு தெரிவித்துள்ளதும் விளம்பரமாகவே மாறும் என விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Trending

Exit mobile version