தமிழ்நாடு

ஜனவரி 31: போலியோ சொட்டு மருந்து முகாம்..!- கொரோனா பாதித்த குந்தைகளுக்குப் போடலாமா?

Published

on

வருகிற ஜனவரி 31-ம் தேதி தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. இதற்காக தமிழகம் எங்கும் 43,051 முகாம்கள் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து முகாம்களிலும் ஜனவரி 31-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் சொட்டு மருந்து வழங்கப்படும்.

கொரோனா அறிகுறிகள் இருக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடலாமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தில், “கொரோனா அறிகுறிகள் இருக்கும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். ஆனால், கொரோனா பாத்திப்பில் இருந்து மீண்ட குழந்தைகள் மற்றும் கொரோனா பாதிப்பு ஏற்படாத குழந்தைகள் நிச்சயமாக போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு ஏற்பாடாக விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் போன்ற பொது இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version