தமிழ்நாடு

பெட்ரோல் விலை: அமைச்சர் பிடிஆர் குற்றச்சாட்டுக்கு பாலிமர் டிவி பதில்!

Published

on

பெட்ரோல் விலை உயர்வு குறித்து பாலிமர் டிவி நேற்று வெளியிட்ட செய்தி ஒன்றுக்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் மறுப்பு வெளியிட்டு இருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது நிதி அமைச்சரின் டுவிட்டுக்கு பாலிமர் செய்தி விளக்கமளித்துள்ளது, அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரபூர்வ இணையதளத்தில் கூறியுள்ளபடி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அடிப்படை விலையாக 38.93 ரூபாயும், போக்குவரத்து செலவாக 36 காசுகளும், டீலர் கமிஷன் ரூ.3.82ம் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.41.32 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவற்றுடன் மத்திய அரசின் கலால் வரி ரூ.32.90 மற்றும் மாநில அரசின் வாட் வரி 24 ரூபாய் சேர்க்கும் போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய் என செய்தி தயாரானது. அப்போது மத்திய மாநில அரசுகளின் வரிகளுடன் சேர்த்து என்று குறிப்பிடுவதற்கு பதிலாக மாநில அரசின் வரிகளோடு மட்டும் குறிப்பிடப்பட்டுவிட்டது. இதனால் பெட்ரோல் விலை மத்திய மாநில அரசுகளின் வரிகள் என புரிந்து கொள்வதற்கு பதில் தமிழக அரசின் வரியாக மட்டும் தவறாக அர்த்தம் புரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது.

மற்றபடி பெட்ரோல் விலை 100 ரூபாயாக உயர்ந்திருக்கும் நிலையில் சாமானியர்கள் படும் கஷ்டத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்த செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டது என்றும் வேறு எந்த நோக்கத்துடன் வெளியிடப்படவில்லை என்றும் பாலிமர் டிவி விளக்கமளித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version