தமிழ்நாடு

பெட்ரோல் விலையேற்றத்துக்கு மாநில அரசே காரணம் என ‘பாலிமர்’ வெளியிட்ட செய்தி – ஆதாரங்களுடன் மறுத்த பி.டி.ஆர்!

Published

on

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் விலைகள் உச்சத்தைத் தொட்டுள்ளன. குறிப்பாக கடந்த சில நாட்களாக உயர்ந்த விலை காரணமாக ஒரு லிட்டர் பெட்ரோல், 100 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ‘பாலிமர்’ செய்தித் தொலைக்காட்சி, ‘பல்வேறு வரிகளுடன் 52.77 பைசாகவாவே ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் மாநில அரசுகளின் வரியுடன் சேர்த்து தான் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது’ என்று செய்தி வெளியிட்டது.

இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன், ‘இன்றைய நிலவரப்படி பெட்ரோல் 100.44 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதில் 24.42 ரூபாய் மட்டும் தான் மாநில அரசுகளின் வரியாக உள்ளது. மத்திய அரசு 32.90 ரூபாயை வரியாக விதிக்கிறது’ என்று கூறி தரவுகளை பகிர்ந்துள்ளார்.

மேலும் அவர், ‘பாலிமர் தொலைக்காட்சியின் காணொளியில் உள்ள பொய்யினை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

1. ஒன்றிய அரசு கொண்டு வந்த விதி தளர்வுக்கு பின் பெட்ரோல் விலையினை நிர்ணயிப்பது அரசுகள் அல்ல. எண்ணெய் நிறுவனங்கள்.

2. ஒன்றிய அரசின் விலை 52.75 என்பது முற்றிலும் பொய்.

3. ஒன்றிய அரசு வரி மட்டுமே விதிக்க முடியும்.
செஸ் 31.50+எக்ஸைஸ் 1.40 = 32.90 ஒன்றிய அரசு வரி விதிக்கிறது. இதில் எக்ஸைஸ் வரியில் 42%(58பைசா) மட்டுமே மாநிலங்களுக்கானது.

வெளிப்படையாக தெரிந்த உண்மையை மாற்றி மக்களை ஏமாற்றும்
பாலிமரின் பொய்முகம் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version