உலகம்

6 மாத கைக்குழந்தையை தாய் போல பார்த்து கொண்ட “போலீசார்”.! வைரல் வீடியோ.!

Published

on

பெண்களுக்கு மட்டுமே தாய்மை பண்பு உள்ளது, ஆண்களுக்கு மட்டுமே உழைக்கும் வல்லமை உள்ளது என்ற பழைய எண்ணங்களை தகர்த்து எரியும் வண்ணம் பல நிகழ்வுகள் இன்றைய காலகட்டத்தில்  நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

“தாயாக தந்தை மாறும் ஒரு காவியம்” என்ற நா.முத்துக்குமாரின் வரிகளை நினைவு படுத்தும் வகையில் ஒரு சம்பவம் ஹைதெராபாத்தில் நிகழ்ந்துள்ளது.

போலீசார்களின் மோசமான முகங்களை மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட நமக்கு ஹைதெராபாத்தை சேர்ந்த ஆறு போலீசார்கள், ஒரு ஆறு மாத குழந்தையை தாயைப்போல பார்த்துக்கொண்ட காட்சி சிலிர்ப்பூட்டியுள்ளது. குரூப் 4 தேர்வு எழுத வந்த ஒரு இளம்பெண் தன் கைக்குழந்தையை வெளியே இருந்த தங்கையிடம் விட்டுச்சென்றுள்ளார்.

தேர்வு நடக்கும் சமயத்தில் அழுத அந்த குழந்தையை சமாளிக்க முடியாமல் அவர் தங்கை திண்டாடிக்கொண்டிருந்த பொழுது அங்கிருந்த சில காவல் அதிகாரிகள் அந்த குழந்தைக்கு கேளிக்கை காட்டி, பாட்டில் இல் பால் கொடுத்து அந்த குழந்தையை தாய் போல பார்த்து கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றிய வீடியோ பதிவுகள் வைரல் ஆகி வருகிறது. இந்த சம்பவத்தை காவலர்கள் மீது நமக்கு இருந்த அதிருப்திக்கு ஒரு மாற்று நிகழ்வு என்றே பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

Trending

Exit mobile version