தமிழ்நாடு

சிறுவர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டால் பெற்றோர் மீது நடவடிக்கை: கடும் எச்சரிக்கை

Published

on

18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் பைக் ரேஸில் ஈடுபாட்டால் அவர்களது பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னையின் முக்கிய சாலைகளில் சிறுவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பைக்ரேஸில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் இந்த ஆபத்தான பைக் ரேஸ் காரணமாக ஒரு சில விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுத்தி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் சாலையில் நடந்து செல்லவே பொது மக்கள் அச்சப்படுகின்றனர். இந்த நிலையில் சென்னை சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களிடம் 107 சட்டப்பிரிவின் கீழ் நன்னடத்தை பத்திரம் எழுதி வாங்க கொள்ளப்படும் என்றும் சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் பைக்ரேஸில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் ஈடுபட்டால் அவர்களது பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version