இந்தியா

வட இந்தியர்கள் பற்றி வதந்தி.. டெல்லியில் தலைமறைவான பாஜக தலைகள்.. விரைந்த போலீஸ்!

Published

on

டெல்லி: தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் பாதுகாப்பாக இல்லை, 16 பேர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக பாஜகவினர் சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். பீகார் பாஜகவினர் சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள்.

சமீபத்தில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தமிழ்நாடு வந்திருந்தார். அவர் திரும்பி சென்ற பின் அவர்களின் சட்டசபையில் பாஜகவின் வீடியோக்களை காட்டி இந்த புகார்களை வைத்தனர்.

வேறு மாநிலங்களில் நடத்த பொய்யான சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்ததாக காட்டி விமர்சனங்களை வைத்து உள்ளனர். இந்த நிலையில்தான் இந்த சம்பவம் தேசிய அளவில் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

North Indians

பத்திரிகையாளர் சுபையர் போன்றவர்கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து பாஜக பரப்பியது பொய்யான வீடியோ என்று குறிப்பிட்டனர். இந்த பொய்யான வீடியோக்களை பரப்பும் நபர்கள் மீது கடுமையானம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு போலீசும் எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில்தான் இதில் பொய்யான செய்திகளை பரப்பிய நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக வரிசையாக வழக்குகளை பதிந்து வருகின்றனர். இதில் பொய்யான அறிக்கை வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்தான் இந்த விவகாரம் தொடர்பாக பொய்யான வீடியோக்களை பரப்பிய பீகார் பாஜகவினர் 4 பேர் தலைமறைவாகி உள்ளனர். பீகாரில் இருந்து இவர்கள் டெல்லிக்கு தப்பி ஓடி உள்ளனராம். பீகார் பாஜக நிர்வாகிகள் பிரசாந்த் உமாரா, தன்வீர் ஆகியோரை பிடிக்க தமிழ்நாடு போலீசாரும் டெல்லி சென்றுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version