தமிழ்நாடு

10 மணிக்கு மேல் ஓட்டலில் சாப்பிட்டவருக்கு அடி உதை: போலீஸின் அராஜகம்

Published

on

கோவை ஹோட்டலில் 10 மணிக்கு மேல் உணவு சாப்பிட்ட வாடிக்கையாளர்களை போலீசார் கண்மூடித்தனமாக அடித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பாதிப்பு அதிகரித்து.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இரவு 10 மணி வரை மட்டுமே ஓட்டல்கள் திறந்து வைக்க வேண்டும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த நிலையில் கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று இரவு 10 மணிக்கு போலீசார் சோதனை செய்து வந்தனர். அப்போது ஒரு ஓட்டலில் ஒரு சிலர் சாப்பிட்டுக் கொண்டு இருந்ததை அடுத்து அவர்களை எஸ்.ஐ முத்து என்பவர் அடித்ததாக தெரிகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் ரத்தம் வரும் அளவுக்கு இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த சிசிடிவி வீடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸ் எஸ்ஐ முத்து என்பவர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இரவு 10 மணிக்கு மேல் கடைகள் திறக்க கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தாலும் வாடிக்கையாளரிடம் போலீசார் நயமாக எடுத்துக் கூறி இருக்கலாம் என்றும் இந்த சின்ன விதிமீறல்களுக்கு எல்லாம் ரத்தம் வரும் அளவுக்கு அடிக்க வேண்டுமா என்றும் நெட்டிசன்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். இதே போலீசார் 10 மணிக்கு மேல் டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்குபவர்களையோ அல்லது ஸ்டார் ஓட்டலில் சாப்பிட்டு வருபவர்களையோ அடிக்க முடியுமா? என்ற கேள்வியையும் அவர்கள் கேட்டுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version